/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குலாலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
/
குலாலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
ADDED : அக் 13, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:தமிழ்நாடு
மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்,
ஈரோடு மாவட்ட குலாலர் சங்கம் சார்பில், மாணவ, மாணவியருக்கு
கல்வித்தொகை வழங்கும் விழா மற்றும் முப்பெரும் விழா கோபியில் நடந்தது.
தலைவர்
ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கனகராஜ் வரவேற்றார். மாநில
தலைவர் சேம.நாராயணன் பேசினார். தமிழக அரசு சார்பில் ரேசன்
கார்டுதாரர்களுக்கு, தை பொங்கலுக்கு மண்பானை, மண் அடுப்பு வழங்க
வேண்டும். குலாலர் சமுதாய மக்களுக்கு, ௫ சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க
வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.