/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டளிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்
/
ஓட்டளிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்
ADDED : ஏப் 19, 2024 06:33 AM
ஈரோடு : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் இன்று நடக்கிறது.
வெளியூரில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டளிக்க வசதியாக, அரசு சார்பில் நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், ஆலைகளில் பணிபுரியும் பல்வேறு மாவட்ட தொழிலாளர், கல்லுாரி மாணவ, மாணவியர் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.இதனால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் முதலே கூட்டம் குவிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வோர் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். இந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடங்களில் கூட்டம் அலைமோதியது. இதேபோல் ஈரோடு ரயில் நிலையத்திலும் கூட்டத்தை காண முடிந்தது.

