/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீசாருடன் மல்லுக்கட்டிய தொழிலாளியால் பரபரப்பு
/
போலீசாருடன் மல்லுக்கட்டிய தொழிலாளியால் பரபரப்பு
ADDED : நவ 09, 2024 01:40 AM
ஈரோடு, நவ. 9-
ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டுக்குள், டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். அவ்வப்போது பஸ் ஸ்டாண்டில் சோதனையில் ஈடுபடும் போலீசார், டூவீலர், கார்களில் வருவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு பஸ் ஸ்டாண்டுக்குள் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி செல்வராஜ், ஸ்கூட்டியில் வந்தார். அவரை பிடித்த போலீசார், அபராதம் விதிக்க விபரம் கேட்டனர்.
தர மறுத்ததுடன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, பஸ் ஸ்டாண்ட்டுக்குள் வந்த டூவீலர்களை தடுத்து நிறுத்தி, ஓரமாக நிறுத்தும்படி கூறி, மொபைல்போனில் வீடியோ எடுத்தும் அட்டகாசம் செய்தார்.
இதை போலீசார் கண்டித்தும் தனது செயலை அவர் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் கோபமடைந்த போலீசார், கடுமையாக எச்சரித்து அபராதம் விதித்தனர்.
அபராதத்தை ஏற்றுக்கொண்டு புறப்பட்டு சென்றார். இதை ஒரு சிலர் வீடியோ எடுத்து, வழக்கம்போல் சமூக வலைதளத்தில் பரவ விட்டனர்.