/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்திய ஈனப்பிறவிக்கு பாடம்' துரை வைகோ ஈரோட்டில் காட்டம்
/
'ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்திய ஈனப்பிறவிக்கு பாடம்' துரை வைகோ ஈரோட்டில் காட்டம்
'ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்திய ஈனப்பிறவிக்கு பாடம்' துரை வைகோ ஈரோட்டில் காட்டம்
'ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்திய ஈனப்பிறவிக்கு பாடம்' துரை வைகோ ஈரோட்டில் காட்டம்
ADDED : ஜன 27, 2025 03:28 AM
ஈரோடு: ''ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்திய ஈனப்பிறவிக்கு, ஈரோடு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்,'' என்று, ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பா-ளரை ஆதரித்து, திருச்சி எம்.பி., துரை வைகோ, நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக ம.தி.மு.க., அலுவலகத்தில், அவர் நிருபர்க-ளிடம் கூறியதாவது: ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்திய ஈனப்பிற-விக்கு, ஈரோடு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட அனைவரும் சந்திரகுமாரை பொது வேட்பாளராக கருதி வெற்றி பெற செய்ய வேண்டும். புதுக்கோட்டை வேங்கை வயல் பிரச்னையில் சி.பி.சி.ஐ.டி., அறிக்கையில் நம்பிக்கை உள்ளது. இதை விட உயர்நீதிமன்றம் மீது முழு நம்பிக்கை உள்ளது.
நாட்டில் மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னை அதிகம் உள்ளது. மக்கள் பிரச்னையை தீர்க்க கூடிய அரசியல்வாதியாக இருக்க நினைக்கிறேன். பரந்துார் விமான நிலையம் தவிர்க்க முடி-யாத ஒன்று. த.வெ.க., தலைவர் விஜய், விமான நிலையம் அமைக்க, பரந்துாரை தவிர வேறு இடத்தை, 30 அல்லது 60 நாட்களுக்குள் தேர்வு செய்து அரசுக்கு தெரிவிக்கலாம். அவ்வாறு செய்தால் நாங்கள் வரவேற்போம். தமிழகத்தில் எட்டு பல்கலை-கழகங்களில் துணைவேந்தர் இல்லை. தமிழக அரசு தான் பல்-கலை கழகத்துக்கு நிதி ஒதுக்குகிறது. இவ்விவகாரத்தில் மாநில அரசின் கருத்தை, கவர்னர் கேட்க மறுத்து வருகிறார். ஈ.வெ.ராவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால்தான், அண்ணாதுரை பிரிந்து வந்தார். ஈ.வெ.ரா., கொள்கையை எல்லாம் ஏற்க முடி-யுமா என்றால் இல்லை. தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டால்தான், ஆரோக்கியமான ஜனநாயகமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.