/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடுரோட்டில் படுத்த போதை ஆசாமியால் டூவீலரில் சென்றவர்கள் மீது மோதிய லாரி

ADDED : அக் 15, 2025 01:00 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே போதை ஆசாமி மீது மோதுவதை தவிர்க்க டிப்பர் லாரி டிரைவர் முயன்ற போது, டூவீலரில் வந்த இருவர் மீது மோதியது.
புன்செய்புளியம்பட்டி- பவானிசாகர் சாலையில் புதுப்பாளையம் பிரிவு அருகே, நேற்று முன்தினம் இரவு, மது போதையில் நபர் ஒருவர் ரோட்டில் தள்ளாடியபடி சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேற நடுரோட்டில் படுத்து விட்டார்.
இந்நிலையில் வந்த ஒரு டிப்பர் லாரி டிரைவர், போதை ஆசாமி மீது ஏறுவதை தவிர்க்க, சாலையில் வலது பக்கம் திடீரென ஏறினார்.
அப்போது டூவீலரில் வந்த அன்புநகரை சேர்ந்த மர வேலை செய்யும் தொழிலாளிகள் ராமச்சந்திரன், 47, மோகன்குமார், ௨௬, மீது லாரி மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான 'சிசிடிவி' காட்சி பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.