/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கட்டடத்தில் ஏறி கல் வீசிய ஆசாமி
/
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கட்டடத்தில் ஏறி கல் வீசிய ஆசாமி
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கட்டடத்தில் ஏறி கல் வீசிய ஆசாமி
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கட்டடத்தில் ஏறி கல் வீசிய ஆசாமி
ADDED : செப் 06, 2025 01:18 AM
ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், அதிகாலையில் பலரும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். நேற்றும் பலர் நடைபயிற்சி சென்றனர். அப்போது நுழைவு வாயில் காவலாளி அறை மீது ஏறிய ஒரு வாலிபர், தான் வைத்திருந்த கற்களால், சாலைகளில் சென்றோர் மீதும், நடை பயிற்சி மேற்கொண்டோர் மீதும் வீசினார்.
இதனால் அச்சமடைந்த மக்கள், ஈரோடு தீயணைப்பு துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். முன்னணி தீயணைப்பு வீரர் பழனிவேல்ராஜ் தலைமையில் வந்த வீரர்கள், கட்டடத்தின் மீது ஏறி நபரை அழைத்து வர முயன்றனர். அவர்கள் மீதும் கற்களை வீசிய நிலையில், நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்டு, சூரம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், 'தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துார் பொன்னுசாமி மகன் குமார், 35, என்றும், மனநலம் பாதித்தவர்' என தெரியவந்தது. குடும்பத்தாரை அழைத்து அவரை ஒப்படைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.