/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா ரெய்டு செய்வதாக கூறி கடையில் புகுந்த நபரால் பரபரப்பு
/
குட்கா ரெய்டு செய்வதாக கூறி கடையில் புகுந்த நபரால் பரபரப்பு
குட்கா ரெய்டு செய்வதாக கூறி கடையில் புகுந்த நபரால் பரபரப்பு
குட்கா ரெய்டு செய்வதாக கூறி கடையில் புகுந்த நபரால் பரபரப்பு
ADDED : மே 23, 2024 06:55 AM
கோபி : குட்கா ரெய்டு செய்வதாக கூறி, மளிகை கடையில் புகுந்த மர்ம நபரால், கோபி அருகே நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
கோபி அருகே கெட்டிச்செவியூரை சேர்ந்தவர் முத்துசாமி, 65, மளிகை கடை உரிமையாளர்; இவரது கடைக்கு, 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் நேற்று காலை 11:15 மணிக்கு பைக்கில் வந்தார். பின் அந்த நபர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் உள்ளதா என்பதை சோதனையிட வந்ததாக கூறியுள்ளார். புகையிலை பொருட்கள் இல்லாததால், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் கடையில் இருந்ததால், அதை வெளியே போடுமாறு முத்துசாமியிடம் கூறியுள்ளார்.
மேலும் அந்த மர்ம நபர், குட்கா பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கூறி விட்டு, பைக்கில் ஏறி சென்றார். சிறுவலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மளிகை கடையில் திருட்டு சம்பவம் ஏதேனும் நடந்துள்ளதா என போலீசார் விசாரித்தனர். முத்துசாமி தரப்பில், புகார் ஏதும் தரவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.