/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
/
வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
ADDED : நவ 13, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், நசியனுார்
பைபாசில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆம்னி வேனில், 22
பைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
வேனை ஓட்டி வந்த
பெருந்துறை, மேலபாளையம், பாவடி தெருவை சேர்ந்த முருகேசன், 46,
என்பவரிடம் விசாரித்தனர். பெருந்துறை பகுதி வட மாநில
தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க, கடத்தி செல்வது தெரிய
வந்தது. போலீசார் அவரை கைது செய்து, வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல்
செய்தனர்.