ADDED : ஜூலை 01, 2026 05:26 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:தமிழக
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய
வலியுறுத்தி, வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில்,
சத்தியமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கண்டன உரையாற்றினார்.
த.வெ.க., அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாக கடன்
தள்ளுபடி செய்ய வேண்டும்.அப்படி செய்யாததால் காதில் பூ சுற்றி
விட்டதாக கருதி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 250க்கும் மேற்பட்ட
விவசாயிகள், காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
