ADDED : ஜூலை 01, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;தமிழக
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி தி.மு.க., மாணவரணி
சார்பில், நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், தடையை
மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இது தொடர்பாக ஈரோட்டில் எம்.பி.,
பிரகாஷ் தலைமையில் 85 பேர், கோபியில் மாவட்ட செயலாளர் நல்லசிவம்
தலைமையில், 250 பேர், பவானியில் நகர்மன்ற தலைவர் சிந்துாரி உள்ளிட்ட,
68 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
