டி.இ.டி., தேர்வு வினாத்தாள் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
டி.இ.டி., தேர்வு வினாத்தாள் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜூலை 01, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:அரசு,
நிதியுதவி, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக
பணியாற்றுவோருக்கான ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு (டெட்) ஜூலை 4,
5ல் தமிழகத்தில் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்வு தாள்-1ஐ
1,876 ஆசிரியர்கள் 4ல், 6 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வு தாள்-2ஐ
5,311 பேர் வரும் 5ல், 20 மையங்களில், 7,187 பேர் எழுதுகின்றனர்.இதற்கான
வினாத்தாள் நேற்று முன் தினம் மாலை ஈரோடு ப.செ.பார்க் அரசு மாதிரி மகளிர்
மேல்நிலை பள்ளிக்கு வந்து சேர்ந்தன. அங்கு ஒரு அறையில் வைக்கப்பட்டு,
அறைக்கு சீல் வைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. அறை முன்புறம், அறைக்குள் 'சிசிடிவி' கேமராக்கள்
பொருத்தப்பட்டு, பள்ளி கல்வி துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
