/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகனை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்ற தாய் பலி மொடக்குறிச்சியில் அதிர்ச்சி

ADDED : நவ 06, 2024 01:56 AM
ஈரோடு, நவ. 6-
மொடக்குறிச்சியில் மகனை மொபட்டில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய், அரசு பஸ் மோதியதில் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.
மொடக்குறிச்சியில், முத்துார் சாலை, பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி அமரேஸ் மனைவி ராணி, 38; தம்பதியருக்கு ஐந்து மற்றும் இரண்டு வயதில் இரு ஆண் குழந்தை உள்ளது. மொபட்டில் மகன் அபினவ்வை அழைத்துக்கொண்டு, ராணி நேற்று காலை பள்ளிக்கு சென்றார்.
மொடக்குறிச்சி யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது வெள்ளகோவிலில் இருந்து ஈரோடு வந்த அரசு பஸ், மொபட் மீது மோதியது. அப்போது தவறி விழுந்த ராணியின் தலை மீது, பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் அதே இடத்தில் பலியானார். மகன் அபினவ் நெற்றியில் சிறு காயத்துடன் தப்பினார்.
மொடக்குறிச்சி போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் சாலை படுமோசமாக உள்ளது. விபத்து ஏற்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது என்று, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
ராணியின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பஸ் மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது.