ADDED : அக் 17, 2024 01:16 AM
பெண்களுக்கான
ஒரு நாள் கருத்தரங்கு
ஈரோடு, அக். 17-
ஈரோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம், 125 பேர் பங்கேற்றனர். இதில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர் சாந்தி துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பூங்கோதை, வக்கீல் கவிதா, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் முருகேசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தகுதி உடையவர்கள் உறுப்பினராக பதிவு செய்வது குறித்து கருத்தரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.