/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : மார் 05, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி-சத்தி சாலை, சின்ன வாய்ப்புதுார் அருகே பள்ளத்தில் நேற்று காலை, 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. புன்செய்புளியம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதுாரை அடுத்த மேட்டூரை சேர்ந்த வேலுச்சாமி, 48, என்பது தெரிந்தது.
தொழிலாளியான அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். அவ்வழியாக உறவினர் வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம். அப்படி சென்றபோது மயங்கி விழுந்து இறந்திருக்கலாம். உடலில் காயங்கள் ஏதுமில்லை. விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.