/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு
/
கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு
ADDED : செப் 06, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியான்காட்டை சேர்ந்த சிவன் மகன் பிரவீன், 33; காஞ்சிக்கோவிலில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று மதியம் முத்துகவுண்டன்பாளையம், பள்ளன்காட்டு அருகில் நடந்து சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர கிணற்றில் தவறி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் தகவலின்படி பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்தனர். 20 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த பிரவீனை, கயிற்றின் மூலம் இறங்கி உயிருடன் மீட்டனர்.