/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிறரின் மனைவியுடன் வாழ்ந்தவர் விபரீத முடிவு
/
பிறரின் மனைவியுடன் வாழ்ந்தவர் விபரீத முடிவு
ADDED : அக் 27, 2024 01:10 AM
பிறரின் மனைவியுடன்
வாழ்ந்தவர் விபரீத முடிவு
ஈரோடு, அக். 27-
ஈரோடு, வெண்டிபாளையம், பால தண்டாயுதம் வீதியை சேர்ந்தவர் அரி செல்வம், 31; இவரின் மனைவி குணசுந்தரி. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அரி செல்வத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டருகே வசித்த உறவுக்கார திருமணமான சங்கீதா என்பவருடன் அரிசெல்வத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் குணசுந்தரி கணவனை பிரிந்து, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அரிசெல்வமும், சங்கீதாவும் மதுரைக்கு சென்று குடும்பம் நடத்தினர்.
இருவரது உறவினர்களும் அங்கு சென்று அறிவுரை வழங்கி, சங்கீதாவை அவரது கணவருடன் செல்ல வைத்தனர். ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு வந்த அரிசெல்வம், மீண்டும் சங்கீதாவுடன் வசித்தார். அரிசெல்வத்தை வீட்டுக்கு அழைத்து செல்ல அவரது உறவினர்கள் கடந்த, 25ம் தேதி காலை வந்தனர். அப்போது வீடு திறந்து கிடந்தது. வீட்டில் லுங்கியால் அரி செல்வம் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.