/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது
/
வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது
ADDED : அக் 24, 2024 01:28 AM
வனத்தில் துப்பாக்கியுடன்
சுற்றி திரிந்தவர் கைது
சத்தியமங்கலம், அக். 24-
சத்தியமங்கலம் வனப்பகுதியில், நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட, கொண்டப்பநாயக்கன் பாளையம் சுற்று பகுதி யில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிசில் மாரியம்மன் கோவில் வனப்பகுதியில் கும்பலாக சிலர் சுற்றி திரிந்தனர். வனத்துறையினரை கண்டதும் கரும்பு காட்டில் புகுந்து தப்பி ஓடினர். அதில் ஒருவர் பிடிபட்டார்.
விசாரணையில் புளியங்கோம்பையை சேர்ந்த நாராயணா, 30, என்பதும், வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் சுற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்பு நாராயணாவை கைது செய்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.