/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடும் பைக்கில் மாரடைப்பு மயங்கி சரிந்த ஏட்டு மரணம்
/
ஓடும் பைக்கில் மாரடைப்பு மயங்கி சரிந்த ஏட்டு மரணம்
ஓடும் பைக்கில் மாரடைப்பு மயங்கி சரிந்த ஏட்டு மரணம்
ஓடும் பைக்கில் மாரடைப்பு மயங்கி சரிந்த ஏட்டு மரணம்
ADDED : டிச 26, 2025 05:03 AM
ஈரோடு:அந்தியூர் தவுட்டுபாளையத்தை சேர்ந்தவர் கமல கண்ணன், 45; ஊட்டி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றினார். நான்கு நாள் விடுமுறையாக நேற்று சொந்த ஊர் வந்தார். தந்தை பழனிச்சாமிக்கு, 70. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்ய, தந்-தையை ஹோண்டா சைன் பைக்கில் நேற்று காலை அழைத்து சென்றார். அசோகபுரம் பகுதியில், 10:30 மணி அளவில் சென்-றபோது, திடீரென பைக் நிலை தடுமாறி விழ, இருவரும் சாலையில் விழுந்தனர். அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு மருத்-துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில் கமல கண்ணன் மாரடைப்பால் ஏற்க-னவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது தந்தை பழனிச்-சாமி லேசான காயமடைந்தார். மாரடைப்பால் இறந்த ஏட்டு கம-லகண்ணனுக்கு, மனைவி சத்யா, இரு மகன்கள்
உள்ளனர்.