/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவன் சாவு
/
வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவன் சாவு
ADDED : நவ 11, 2024 07:30 AM
பெருந்துறை: பெருந்துறை, ஈங்கூர், ஆர்.எஸ்.ரோட்டை சேர்ந்த சுதாநாயக் மகன் சந்தன், 17; ஈங்கூர் அரசுப்பள்ளி பிளஸ் ௨ மாணவன். பெருந்துறை வாய்க்கால் மேட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நுழைவுத்தேர்வு எழுத சென்றார். மாலையில் தேர்வு முடிந்து சக பள்ளி மாணவர்கள் ஐந்து பேருடன், கல்லுாரி அருகில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார்.
நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றவர் தண்ணீரில் மூழ்கினார். தகவலின்படி பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தேடினர். இரவானதால் தேடும் பணியை கைவிட்டனர். மாணவன் குளித்த இடத்தில் இருந்து, ௨ கி.மீ., தொலைவில் பள்ளக்காட்டு தோட்டம் அருகில் சந்தன் உடல் நேற்று கரை ஒதுங்கியது.
* பெருந்துறை, வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில், 70 வயது மதிக்கதக்க முதியவர் உடல் நேற்று கரை ஒதுங்கி கிடந்தது. இறந்தவர் வெள்ளை புளூ கலர் கட்டம் போட்ட லுங்கி, பாசி கலர் கை பனியன் அணிந்திருந்தார். இடது தொடையில் கருப்பு மச்சம். வலது தொடையில் பழைய காய தழும்பு இருந்தது. பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.