/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி துணி எடுக்க ஆர்வம் படையெடுத்த மக்களால் களை கட்டிய கடைவீதி
/
தீபாவளி துணி எடுக்க ஆர்வம் படையெடுத்த மக்களால் களை கட்டிய கடைவீதி
தீபாவளி துணி எடுக்க ஆர்வம் படையெடுத்த மக்களால் களை கட்டிய கடைவீதி
தீபாவளி துணி எடுக்க ஆர்வம் படையெடுத்த மக்களால் களை கட்டிய கடைவீதி
ADDED : அக் 13, 2025 01:58 AM
ஈரோடு:தீபாவளி
பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒரு வாரமே
உள்ள நிலையில், புதுத்துணி எடுப்பதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரை, சிறுமியர் முதல் பெண்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால்
ஜவுளி கடைகளில் மாலை வேளைகளில் வியாபாரம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில்
விடுமுறை தினமான நேற்று, ஜவுளி ரகங்கள், கவரிங் நகைகள், அலங்கார
பொருள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க மாநகர், சுற்றுப்புற
பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கடைகளுக்கு
படையெடுத்தனர். இதனால் மாநகர சாலைகளில் எங்கு பார்த்தாலும் மனித
தலையே காணப்பட்டது. ஒரு கட்டத்தில் நடந்து செல்வதே பெரும்பாடானது.
குறிப்பாக ப.செ.பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலை, நேதாஜி
சாலை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் குவிந்தது. மதியம், 12:00 மணிக்கு மேல்
கூட்டம் அதிகரித்து, வீதிகளில் அலைமோதியது. நேரம் செல்ல செல்ல
மேலும் அதிகரித்தது. வியாபாரம் களை கட்டியதால், ஜவுளி
கடைக்காரர்கள் உள்ளிட்ட பிற வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.