/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சர் துவக்கிய பஸ் நிறுத்தம் இன்று முதல் இயக்குவதாக தகவல்
/
அமைச்சர் துவக்கிய பஸ் நிறுத்தம் இன்று முதல் இயக்குவதாக தகவல்
அமைச்சர் துவக்கிய பஸ் நிறுத்தம் இன்று முதல் இயக்குவதாக தகவல்
அமைச்சர் துவக்கிய பஸ் நிறுத்தம் இன்று முதல் இயக்குவதாக தகவல்
ADDED : அக் 13, 2025 01:58 AM
ஈரோடு:ஈரோடு-சென்னிமலை
வழித்தடத்தில் இரு மாதங்களுக்கு முன், புதியதாக பி.எஸ்-௬, தாழ்தள
அரசு டவுன் பஸ் (நெ-௧௧) (டி.என்.33 என்-3555) அமைச்சர் முத்துசாமி இயக்கி
வைத்தார்.
தனியார் பஸ்சுக்கு இணையாக இருக்கை வசதி, வேகம்,
பாதுகாப்பான பயணம் உள்ளிட்டவற்றால் மக்கள் விரும்பி பயணித்தனர்.
அதேசமயம் இந்த பஸ்சுக்கு முன், பின் தனியார் டவுன் பஸ்கள்
இயக்கப்படுவதால், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை. இதனால், 20
நாட்களுக்கும் மேலாக பஸ்சை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். தற்போது
பழைய பஸ்சை இயக்குகின்றனர்.
இதற்கிடையில் புதிய பஸ்சை வேறு
வழித்தடத்தில் அவ்வப்போது இயக்கப்படுகிறது. போக்குவரத்து
அதிகாரிகளின் இந்த செயல், பயணிகள் மத்தியில் பல்வேறு கேள்வி மற்றும்
சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து கேட்டபோது
போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது; கிலோ மீட்டர் செக்
செய்வதற்காக அந்த பஸ் வேறு வழித்தடத்தில் இயக்கி
பரிசோதிக்கப்பட்டது. நாளை (இன்று) முதல் ஈரோடு - சென்னிமலை
வழித்தடத்தில் தொடர்ந்து இயக்கப்படும். இவ்வாறு கூறினர்.