/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே பாலத்தில் தேங்கிய தண்ணீர்; மாஜி அமைச்சர் ஆய்வு
/
ரயில்வே பாலத்தில் தேங்கிய தண்ணீர்; மாஜி அமைச்சர் ஆய்வு
ரயில்வே பாலத்தில் தேங்கிய தண்ணீர்; மாஜி அமைச்சர் ஆய்வு
ரயில்வே பாலத்தில் தேங்கிய தண்ணீர்; மாஜி அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 13, 2025 01:57 AM
சென்னிமலை:பெருந்துறை
தொகுதிக்கு உட்பட்ட, சென்னிமலை யூனியன் வாய்ப்பாடியில் ரயில்வே
நுழைவு பாலம் உள்ளது. மழைக்காலத்தில் பாலத்தில் மழைநீர் தேங்கி
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நேற்று முன்தினம் பெய்த
கனமழையால் பாலத்தில் தண்ணீர் தேங்கி அரசு டவுன் பஸ் சிக்கியது.
இந்நிலையில்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சென்னிமலை பி.டி.ஓ., பாலமுருகன்,
துறை சார்ந்த அதிகாரிகளுடன், முன்னாள் அமைச்சரும் தி.மு.க., மாவட்ட
செயலாளருமான வெங்கடாச்சலம் நேற்று பார்வையிட்டு ஆலோசனை
நடத்தினார். பிறகு தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியான விவசாயிக்கு
ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தெருநாய்கள்
கடித்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க, அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. ஒன்பது மாதங்களுக்கு
முன் நடந்த சம்பவத்துக்கே இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. மாவட்ட
நிர்வாகம் விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.