/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உடைந்து விழும் நிலையில் வழிகாட்டி பலகை
/
உடைந்து விழும் நிலையில் வழிகாட்டி பலகை
ADDED : டிச 15, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், டிச. 15-
அந்தியூர் டவுன் பஞ்., சார்பில், நான்கு மாதங்களுக்கு முன், அனைத்து தெருக்களின் நுழைவு வாயில் முன், தெருக்களின் பெயர், வார்டு எண்ணுடன், இரும்பினால் ஆன வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டது.
இதன்படி தவிட்டுப்பாளையத்தில், ஆப்பகூடல் சாலையில் திருவள்ளுவர் வீதிக்கு செல்லும் சாலை நுழைவு வாயில் முன் வைக்கப்பட்ட பெயர் பலகையின் இரும்பு துாண் சிமெண்ட் காரை பெயர்ந்து சாய்ந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், இரு குச்சிகளை வைத்து நிறுத்தியுள்ளனர். வழிகாட்டி பலகையை முறையாக அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.