ADDED : நவ 02, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த இச்சிபட்டி பகுதியில் விவசாயி ஒருவரின் ஆட்டை, இரு வாலிபர்கள் நேற்று காலை, 4:00 மணியளவில் திருட முயன்றனர். ஆட்டின் அலறல் கேட்டு, உஷாரான கிராம மக்கள், இரு இளைஞர்களையும் சுற்றி வளைத்தனர்.
மேலும் அவர்கள் யார், எந்த ஊர் என கேட்டு, தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் ஊதியூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், ஆடு திருட வந்தவர்கள் தாராபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம், 25, கோகுல்ராஜ், 26, என்பது தெரியவந்தது. இது குறித்து, ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

