UPDATED : அக் 30, 2026 06:31 AM
ADDED : அக் 30, 2026 06:18 AM

அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
வாரச்சந்தை நேற்று கூடியது. சந்தைக்கு, 300க்கும் மேற்பட்ட வெங்காய
மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு
கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் பெண்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
அதேசமயம் இரண்டு மாதங்களுக்கு முன் சின்ன
வெங்காயத்தை அறுவடை செய்து, தோட்டங்களில் பட்டறை அமைத்து, இருப்பு
வைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி சமயத்தில்
விலை மேலும் உயரும் என்பதே இதற்கு காரணம். வடகிழக்கு பருவமழையால்
விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். மூன்று
மாத பயிரான சின்ன வெங்காயம் அறுவடைக்கு வரும் சமயத்தில் விலை
குறையும் என்றும் தெரிவித்தனர்.
