UPDATED : அக் 30, 2026 06:31 AM
ADDED : அக் 30, 2026 06:17 AM
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி குயவன் திட்டு, நடராஜா தியேட்டர் பின்புறம் உள்ளிட்ட
பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், 386 வீடுகள்
உள்ளன. எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், இங்கு
வசிக்கும் மக்களை வெளியேறுமாறு, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்
வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மாற்றிடம், மீண்டும் இதே இடத்தில்
வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, காலி செய்ய மறுத்து மக்கள் போராடி வருகின்றனர். இது
தொர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ., முத்துசாமி முன்னிலையில் நேற்று முன்தினம்
கூட்டம் நடந்தது. இதில் நவ.,15க்குள் குடியிருப்பை காலி செய்து
தருவதாக மக்கள் உறுதியளித்து சென்றனர். இதற்கிடையில் நேற்று
மதியம், 40க்கும் மேற்பட்டோர், வீடுகளை விட்டு வெளியேறி போராட்டத்தில்
ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்களாகவே கலைந்து
சென்றனர்.
