/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் அருகே விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி
/
காங்கேயம் அருகே விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி
காங்கேயம் அருகே விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி
காங்கேயம் அருகே விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி
ADDED : அக் 27, 2024 01:30 AM
காங்கேயம், அக். 27-
தாராபுரம் அருகேயுள்ள நஞ்சியம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி மகன் பிரகாஷ், 34; சாப்ட்வேர் இன்ஜினியர். சர்க்கரை வியாபாரமும் செய்து வந்தார். வியாபாரம் சம்பந்தமாக போர்டு பிகோ காரில் சென்னிமலைக்கு நேற்று காலை, 10:30 மணியளவில் சென்றார். காங்கேயம் நால்ரோடு அருகே ஆவங்காளிபாளையத்தில் சென்றபோது, காருக்கு முன்னால் சென்ற டூவீலர் திடீரென ரோட்டை கடந்து சென்றது. டூவீலர் மீது மோதாமலிருக்க காரை வலதுபுறம் திருப்பினார். அப்போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த பிரகாஷை, அக்கம்பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சூலுார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார். விபத்தில் பலியான பிரகாசுக்கு ஜனனி என்ற மனைவி, இரண்டு வயதில் ஆண், பெண் என இரட்டை குழந்தை உள்ளது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.