/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜிம்னாஸ்டிக் போட்டியில் 7 பதக்கம் பெற்ற மாணவி
/
ஜிம்னாஸ்டிக் போட்டியில் 7 பதக்கம் பெற்ற மாணவி
ADDED : நவ 05, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜிம்னாஸ்டிக் போட்டியில்
7 பதக்கம் பெற்ற மாணவி
ஈரோடு, நவ. 5-
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி, ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி நேத்ராஸ்ரீ, ஏழு பிரிவுகளில் பங்கேற்றார். இதில் நான்கு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இரு பிரிவுகளில் வெள்ளி, ஒரு பிரிவில் வெண்கலம் பெற்றார். மாணவிக்கு பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை சுமதி, பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.