ADDED : மார் 15, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை
அடுத்த கொங்கர்பாளையம், வெள்ளக்கரட்டை சேர்ந்தவர் ஈஸ்வரி.
இவரின்
மருமகன் சடையப்பன், 37; இவர், குத்தியாலத்துார் பத்திரிகை படுகையை
சேர்ந்தவர். உடும்பை வேட்டையாடிய சடையப்பன், மாமியார் வீட்டில் கறியை
வைத்திருப்பதாக, டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் போனது.
வனத்துறையினர் சோதனை செய்ததில், அரை கிலோ உடும்பு கறியை பறிமுதல்
செய்தனர். வெள்ளக்கரடு வனப்பகுதியில் கண்ணி வைத்து பிடித்ததாக
கூறினார். கண்ணி வலை, வெட்டுக்கத்தியை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.

