/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமூக விரோதிகள் கூடாரமான கழிப்பிடம்
/
சமூக விரோதிகள் கூடாரமான கழிப்பிடம்
ADDED : டிச 08, 2025 05:09 AM

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நான்காவது மண்டலத்தில், 1.92 லட்சம் ரூபாய் மதிப்பில், நாடார்மேட்டில் இலவச சிறுநீர் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக கழிவறை உள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை. இதனால் சமூக விரோதிகள் இரவில் கூடாரமாக பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்-ளதால், இரவில் குடிமகன்கள், கழிப்பிடத்தை பாராக மாற்றி கொள்கின்றனர். சமூக விரோதிகளும் இரவில் மறைந்து கொண்டு, மக்கள் நடமாட்டத்தை நோட்டம் விட்டு பணம், நகை உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்து செல்வதை வாடிக்-கையாக கொண்டுள்ளனர். கழிவறைக்கு தண்ணீர் வசதி செய்து தரவேண்டும். கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே, சமூக விரோதிகள் இங்கிருந்து ஓட்டம் பிடிப்பர். இவ்வாறு கூறினர்.

