/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெசவாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை
/
நெசவாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை
ADDED : அக் 30, 2024 01:04 AM
நெசவாளர்களுக்கு
ஒரு வாரம் விடுமுறை
ஈரோடு, அக். 30-
தீபாவளியை கொண்டாடும் நோக்கில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெசவாளர்களுக்கு இன்று முதல் ஒரு வார காலத்துக்கு விடுமுறை விடுத்துள்ளனர்.
இதுபற்றி நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சில ஆண்டாக கொரோனா உட்பட சில காரணத்தால் ஜவுளி சார்ந்த தொழில் பாதித்தது. இந்தாண்டு சிறப்பாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 50,000 தறிகள் உள்ளன. அதில் நேரடியாக, மறைமுகமாக, ஒரு லட்சம் நெசவாளர் ஈடுபட்டுள்ளனர்.
இத்தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஒரு வார காலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவ.,6ம் தேதிதான் தறிகள் மீண்டும் முழு செயல்பாட்டை துவங்கும். அரசின் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் மட்டும், நவ.,4ல் பணியை தொடங்குவர். இவ்வாறு கூறினர்.