/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டப்பகலில் வீடு புகுந்து நகை பறிக்க முயன்ற பெண்
/
பட்டப்பகலில் வீடு புகுந்து நகை பறிக்க முயன்ற பெண்
ADDED : செப் 22, 2024 04:02 AM
ஈரோடு: ஈரோட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து, மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பெண் சிக்கினார்.
ஈரோடு, மூலப்பாளையம், எல்.ஐ.சி. நகரை சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி நான்சி டயானா. இருவரும் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றனர். விஜயின் தாய் மேரி ஸ்டெல்லா மட்டும் வீட்டில் இருந்தார். வீட்டு மேல்
பகுதி காலியாக இருப்பதால், வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு வைத்திருந்தனர். மதியம் வந்த ஒரு பெண், வாடகைக்கு வீடு கேட்பதுபோல் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை, மேரி ஸ்டெல்லா மீது வீசினார். இதில் அவர் நிலைகுலைய, கழுத்தில் போட்டிருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். மேரி ஸ்டெல்லா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு, பெண்ணை பிடித்தனர். ஈரோடு தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஈரோடு, பாரதி நகரை சேர்ந்த பேபி, 38, என தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.