/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் மாணவ-, மாணவிகளுக்கான பயிலரங்கு
/
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் மாணவ-, மாணவிகளுக்கான பயிலரங்கு
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் மாணவ-, மாணவிகளுக்கான பயிலரங்கு
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் மாணவ-, மாணவிகளுக்கான பயிலரங்கு
ADDED : ஆக 09, 2024 02:45 AM
ஈரோடு: ஈரோடு, கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் கணினி அறி-வியல் மற்றும் தகவல் பகுப்பாய்வு துறை சார்பில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிலரங்கு மூன்று நாட்கள் நடந்தது.
பயிலரங்கிற்கு கல்லுாரி தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பாளராக பெங்களூரை சேர்ந்த நெட்வோர்க் பொறியாளர் வசந்தகுமார் பங்கேற்று, மென்பொருள் தொழில்-நுட்பம், மென்பொருளின் எதிர்கால அவசியங்கள், தொழில் தொடர்பான தகவல்களோடு கிளவுட் மற்றும் அமேசான் இணைய தொடர்பான சேவைகள் குறித்த பயிற்சியை மாணவர்க-ளுக்கு விளக்கமாக அளித்தார்.
மூன்றாம் ஆண்டு இளநிலை கணினி அறிவியல் துறையை சார்ந்த மாணவ, -மாணவிகள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, இளநிலை கணினி அறிவியல் துறையின் தலைவர் ரமேஷ் வரவேற்றார். உதவி பேராசிரியர் கோகிலா நன்றி
கூறினார்.