ADDED : ஜூன் 17, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
பவானி:பீஹார்
மாநிலத்தை சேர்ந்த அபர்ஜித் குமார், 20, பவானி அருகே
காடையாம்பட்டியில் ஒரு டையிங் பேக்டரியில் தங்கி கூலி வேலை செய்தார்.
ஆறு மாதத்துக்கு முன் பீகாரில் இருந்தபோது நாய் கடித்துள்ளது.
தடுப்பூசியும் போட்டுள்ளார்.
இந்நிலையில் காடையாம்பட்டிக்கு
வந்தவர் வேலை செய்து வந்தார். கடந்த, 13ல் உடல்நிலை சரியில்லை என, பவானி
அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக
பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
