ADDED : ஜூன் 19, 2026 05:21 AM
ஈரோடு:ஈரோடு, மாமரத்துப்பாளையம், ஸ்ரீ சக்தி நகரை சேர்ந்த சிவசுப்பிரமணியம் மகன் ஞானபிரகாஷ், 29. ஈரோடு, வில்லரசம்பட்டியில் உள்ள டிரேடர்ஸ் கம்பெனியில் பணியாற்றினார். இவருக்கு கரூரை சேர்ந்த உறவுக்கார பெண்ணை, வரும் 25ல் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.
கடந்த 17ல் வழக்கம்போல் ஞானபிரகாஷ் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஈரோடு நாராயணவலசு திருமால் நகரில் மாது என்பவர் வீட்டு முன் மயங்கி கிடப்பதாக, தந்தைக்கு தகவல் வந்தது. அங்கு சென்று ஞானபிரகாசத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ேகொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஞானபிரகாஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், 'ஞானபிரகாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணம் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம்' என்றனர்.
