ADDED : ஜூன் 19, 2026 05:22 AM
ஈரோடு:ஈரோடு,
சூரியம்பாளையம் அமராவதி நகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன்
லோகேஷ்வரன், 22. இதே போல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு
நெய்காரன் பாளையத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் ஜீவானந்தம், 28.
இவர்கள் இருவரும் தலா, 3.200 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சித்தோடு
போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இருவரையும் குண்டர்
தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என, சித்தோடு
போலீசார் ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதி வாயிலாக, ஈரோடு கலெக்டருக்கு
பரிந்துரைத்தனர். ஈரோடு கலெக்டர் கந்தசாமி பரிசீலனை செய்து
வாலிபர்கள் இருவரையும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில், சிறையில்
அடைக்க உத்தரவிட்டார். இதன்படி இருவரும் நேற்று முன் தினம் கோபி
சிறையில் இருந்து, கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு
அடைக்கப்பட்டனர்.
