ADDED : ஆக 07, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:முருகப்பெருமானுக்கு
உகந்த தினமாக ஆடி கிருத்திகை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில்
நேற்று, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில்,
சிறப்பு வழிபாடு, பூஜை, ஆராதனை நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை
முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். முருகப்பெருமானை
வணங்கி சென்றனர்.
* பவானி பழனியாண்டவர் கோவில், ஆப்பக்கூடல் கணேச
பாலதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில்களில் அதிகாலை நடை
திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து
சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
