/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலை முருகன் கோவிலில் ஆடி சஷ்டி சிறப்பு பூஜை
/
சிவன்மலை முருகன் கோவிலில் ஆடி சஷ்டி சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 31, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்,  திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆடி பதினெட்டு என இந்த மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும். நேற்று ஆடி சஷ்டியை முன்னிட்டு காலை, 6:00 மணிக்கு அபிஷேகம், 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆடி சஷ்டி பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி ரதத்தில் மலையை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.சிவன்மலை அடிவாரத்தில் உள்ள, சஷ்டி அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

