ADDED : ஆக 08, 2026 05:47 AM
நிருபர் குழு
ஆடி
மாத நான்காவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோடு மாநகர், மாவட்டத்தில்,
அம்மன் கோவில்களில் வழிபாடு களை கட்டியது. ஆயிரக்கணக்கான
பக்தர்கள் குவிந்தனர்.
கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர்
கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், காலை, 7:00 மணி முதலே பக்தர்கள்
குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி நீள குண்டத்தில், பெண்
பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டு சென்றனர். இதேபோல் மொடச்சூர்
தான்தோன்றியம்மன் கோவில், கலிங்கியம் கரியகாளியம்மன் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*
புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், ஊத்துக்குளியம்மன், பிளேக்
மாரியம்மன், காமாட்சியம்மன், ஆதிபராசக்தி அம்மன்,
சவுடேஸ்வரியம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனைகளுடன் அம்மனுக்கு
சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு, தீபாராதனை நடந்தது. மாரியம்மன்,
பிளேக் மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
*
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் காலை, 6:00 மணிக்கு நடை
திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. சிங்கார வீதி அங்காளம்மன்
கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.
