/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேரிடர் காலத்திலும் 'ஆவின்' வினியோகம் பாதிக்காது! அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
/
பேரிடர் காலத்திலும் 'ஆவின்' வினியோகம் பாதிக்காது! அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பேரிடர் காலத்திலும் 'ஆவின்' வினியோகம் பாதிக்காது! அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பேரிடர் காலத்திலும் 'ஆவின்' வினியோகம் பாதிக்காது! அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
ADDED : மே 24, 2025 01:57 AM
திருப்பூர் ''பேரிடர் காலத்திலும் ஆவின் பால் வினியோக சங்கிலி பாதிக்கப்படாது,' என, அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பால் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், பால் உற்பத்தியாளர்களுக்கு இலவச தையல் மெஷின், பசுந்தீவன விதை, கால்நடை காப்பீடு, கறவை மாடு பராமரிப்பு கடன், கூட்டுறவு சங்கங்களுக்கு கம்ப்யூட்டர் என, 567 பயனாளிகளுக்கு, 82 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் பால் வளத்துறை, ஆவின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்களிடமிருந்தும், பால் உற்பத்தியாளர் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கே மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து, அரசு அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது, பால் கொள்முதல் 1.80 லட்சம் லிட்டராக உள்ளது; இதனை, 3.60 லட்சம் லிட்டராக இரட்டிப்பாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவகாலம் துவங்க உள்ளது. எத்தகைய பேரிடர் காலத்திலும், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் வினியோக சங்கிலி பாதிக்கப்படாது. கடந்த காலங்களில் பேரிடர் காலங்களில் கடைபிடித்த வியூகங்களை கடைபிடித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பால் வினியோகம் இயல்பு நிலையில் தொடரச்செய்யப்படும்.
இந்தியாவிலேயே மிக குறைந்த விலைக்கு, தரமானதாக விற்பனை செய்யப்படுவது ஆவின்பால் மட்டுமே. அதனால், ஆவினுக்கு நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மாநகராட்சி, 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.