/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சி ஊழியர்களின் தரக்குறைவான பேச்சு: போலீசில் புகார் தந்த பெண் வியாபாரி
/
நகராட்சி ஊழியர்களின் தரக்குறைவான பேச்சு: போலீசில் புகார் தந்த பெண் வியாபாரி
நகராட்சி ஊழியர்களின் தரக்குறைவான பேச்சு: போலீசில் புகார் தந்த பெண் வியாபாரி
நகராட்சி ஊழியர்களின் தரக்குறைவான பேச்சு: போலீசில் புகார் தந்த பெண் வியாபாரி
ADDED : செப் 13, 2024 06:39 AM
புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி வணிக வளாகத்தில் பூக்கடை நடத்தும் பெண்களை தரக்குறைவாக பேசி தாக்க முயன்ற, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது கோரி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., வணிக வளாக கடையில் கடை நடத்தும் காயத்ரி, 30, போலீசில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடை எண், 9ல் முறையாக ஏலம் எடுத்து நடத்தி வந்த நிலையில் கடையை காலி செய்ய நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
இந்நிலையில் நகராட்சி மேலாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர், நகராட்சியில் பணிபுரியும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத துப்புரவு பணியாளர் மற்றும் நகராட்சி துணைத்தலைவருக்கு ஆதரவானவர் ஐந்து பேருடன், கடையை காலி செய்யுமாறு மிரட்டியதோடு, என்னை பிடித்து கீழே தள்ளினர்.
கடையில் உள்ள பொருட்களை வலுக்கட்டாயமாக குப்பை வண்டியில் ஏற்றினர். கடைக்கு உள்ளே நுழைந்து பெண் எனவும் பாராமல், மக்கள் முன்னிலையில் கையைப்பிடித்து இழுத்து வெளியேற்றி தகாத வார்த்தை பேசினர். இதில் ஈடுபட்ட அனைவரும் அரசு அலுவலர்கள். ஆனால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளாமல் சட்டத்துக்கு புறம்பாக கடையை காலி செய்ய மிரட்டியுள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.