/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'முடிவுற உள்ள பணிகளை விரைவுபடுத்துங்கள்'
/
'முடிவுற உள்ள பணிகளை விரைவுபடுத்துங்கள்'
ADDED : நவ 04, 2025 02:07 AM
ஈரோடு,  ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பேசியதாவது: தோனிமடுவு திட்டம், காவிரி ஆற்றின் உபரி நீரை, மேட்டூர் அணை நீர் பரப்பு பகுதிகளில் இருந்து பவானி மற்றும் அந்தியூர் வட்டங்கள் பயன் பெறும் வகையில் உந்துதல் மூலம் நீர் நிரப்பும் திட்டம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஈரோடு, சோலார் பஸ் ஸ்டாண்ட் உட்பட முடிவுறும் நிலையில் உள்ள பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய
கூடுதல் பணிகளை தயார் செய்ய என கேட்டு கொண்டார். பணிக்காலத்தில் உயிரிழந்த வாரிசுதாரர், 17 பேருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கூட்டத்தில் அந்தியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.

