/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகன் இறந்த துக்கத்தால் 70 வயது தாயாரும் சாவு
/
மகன் இறந்த துக்கத்தால் 70 வயது தாயாரும் சாவு
ADDED : நவ 04, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் பெரியசாமி, 52; கொளத்துப்பாளையம் பேரூராட்சி துாய்மை பணியாளர். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர். நேற்று அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இறந்து விட்டது தெரிய வந்தது.
தகவலறிந்து பெரியசாமி தாயார் ஆரம்மாள், 70, அரசு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுது கொண்டிருந்தவர் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது, அவரும் இறந்து விட்டது தெரிய வந்தது.

