/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு
/
துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு
ADDED : மார் 28, 2024 07:08 AM
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.ஈரோடு சம்பத் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, நகர்நல அலுவலர் பிரகாஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், 'விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம். உங்கள் ஓட்டின் மூலம் உங்கள் குரலை உயர்த்துவோம். வாக்காளர் என்பதில் பெருமையாக, உங்கள் ஓட்டை அளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்,' என்ற வாசகம் அச்சிட்ட ஒளிரும் மேல் சட்டைகளை, துாய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.பின், ஓட்டுப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர். இடது கை ஆள் காட்டி விரலை உயர்த்தி, 'நாம் அனைவரும் ஓட்டளிப்போம்' என உறுதிமொழி ஏற்றனர்.கூடுதல் கலெக்டர் மணிஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் சண்முகவடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.