ADDED : நவ 01, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் தேசிய
ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
சர்தார்
வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள்
உறுதிமொழியை, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் படிக்க, அனைத்து துறை
அலுவலர்கள் ஏற்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது)
தேன்மொழி, (நிலம்) முரளி, ஈரோடு ஆர்.டி.ஓ., முத்துசாமி உட்பட பலர்
பங்கேற்றனர்.
