/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடும் அரசு பஸ்சில் டிரைவருக்கு வலிப்பு கம்பத்தில் மோதியதால் விபத்து தவிர்ப்பு

ADDED : டிச 29, 2024 12:56 AM
ஓடும் அரசு பஸ்சில் டிரைவருக்கு வலிப்பு
கம்பத்தில் மோதியதால் விபத்து தவிர்ப்பு
ஈரோடு, டிச. 29-
சூரம்பட்டி வலசில் இருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் செல்லும் அரசு டவுன் பஸ் (எண்:3/சி5) நேற்று காலை சூரம்பட்டி வலசில் இருந்து கிளம்பியது. டிரைவர் அண்ணாதுரை, ௫௭, ஓட்டினார். பஸ்சில், ௨௫ பயணிகள் இருந்தனர். கண்டக்டராக தருண், 27, இருந்தார். எஸ்.கே.சி., சாலை கிராமடை பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது, டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதைப்பார்த்த பயணிகள் சத்தம் போட்டனர். அதற்குள் பஸ் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுற மின் கம்பத்தில் மோதி நின்றது. உடனடியாக அப்பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. உடைந்த கம்பம் பஸ் மீது விழுந்தது. பஸ் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த ஒரு பைக் சேதமானது. அப்பகுதி மக்கள் டிரைவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக பயணிகள், மக்களுக்கு காயம் ஏற்படவில்லை. சில தினங்களுக்கு முன் இதே பஸ்சின் முன்புற கண்ணாடியை ஒரு குடிமகன் திடீரென கல்வீசி உடைத்தார். இந்நிலையில் அதே பஸ், டிரைவருக்கு ஏற்பட்ட வலிப்பால் விபத்தில் சிக்கியுள்ளது.