நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழங்குற்றவாளி கைது
ஈரோடு, நவ. 12-
ஈரோடு, கரூர் பை-பாஸ் சாலை, காந்திஜி வீதியை சேர்ந்தவர் அருண் குமார், 44; இவரது வீட்டில் கடந்த, ௪ம் தேதி பீரோவில் இருந்த மூன்று பவுன் நகை, ௧.௨௦ லட்சம் ரூபாய் திருட்டு போனது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரணையில், சித்தோடு, ராயர்பாளையம் புதுாரை சேர்ந்த தமிழ் (எ) தமிழரசு, 24, என்பவரை கைது செய்தனர். அவருடன் திருட்டுக்கு உறுதுணையாக இருந்த பவானியை சேர்ந்த, 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். இருவரிடமும் நகை, பணத்தை மீட்டனர். தமிழரசு மீது தாலுகா போலீசில் ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

