/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் மக்களின் கருத்துக்கு எதிரான செயல்பாடு
/
கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் மக்களின் கருத்துக்கு எதிரான செயல்பாடு
கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் மக்களின் கருத்துக்கு எதிரான செயல்பாடு
கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் மக்களின் கருத்துக்கு எதிரான செயல்பாடு
ADDED : ஜன 06, 2025 02:23 AM
தமிழக அரசு மீது குற்றச்சாட்டு
புன்செய்புளியம்பட்டி: தமிழகத்தில் நேற்றுடன் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தின் பதவிக்-காலம் முடிவடைந்தது. ஏற்கனவே நகர்புற உள்ளாட்சி அமைப்பு
களுடன் அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைப்-பது, மக்கள் தொகை அதிகமாக உள்ள ஊராட்சிகளை பேரூராட்சி-யாக தரம் உயர்த்துவது என அரசு முடிவு செய்து அதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்-பட்டது. அதன்படி பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் மற்றும் நொச்சிக்குட்டை ஊராட்சிகள் புன்செய் புளியம்பட்டி நக-ராட்சியுடன் இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. கடந்த சில மாதங்களாகவே ஊரக உள்ளாட்சிகளை அருகில் உள்ள நகராட்சியுடன் இணைப்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்-பட்டன. அதில் நல்லுார் ஊராட்சி மக்கள் ஊராட்சியாகவே தொடர விருப்பம் தெரிவித்திருந்தனர். இது குறித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்-களின் கருத்துக்கு எதிராக அரசாணை வெளியிட்டுள்ளதாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: குறைந்த வருமானம் கொண்ட எங்களுக்கு ஊராட்சியாகவே தொடர விருப்பம் என தெரிவித்தி-ருந்தோம். அதை கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மா-னமும் நிறைவேற்றினோம். அதையும் மீறி ஊராட்சிகளை சிதைத்து புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க உத்த-ரவு வெளியாகியுள்ளது. கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறை-வேற்றியும் மக்களின் கருத்தை மதிக்காமல் அரசு செயல்படு
கிறது. இதனால் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி அதிக-ரிக்கும். நுாறு நாள் வேலை திட்டமும் இல்லாமல் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு கூறினர்.