/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி பழைய கட்டுமான பழுது ஆய்வு விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை: அமைச்சர்
/
கீழ்பவானி பழைய கட்டுமான பழுது ஆய்வு விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை: அமைச்சர்
கீழ்பவானி பழைய கட்டுமான பழுது ஆய்வு விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை: அமைச்சர்
கீழ்பவானி பழைய கட்டுமான பழுது ஆய்வு விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை: அமைச்சர்
ADDED : ஆக 07, 2025 01:44 AM
ஈரோடு, ''கீழ்பவானி பழைய கட்டுமான பழுதுகள் ஆய்வு செய்து, விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களை ஆய்வு செய்ய தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டரும், நானும் ஆய்வு செய்து, பொறியாளர்களுடன் ஆலோசித்துள்ளோம். பழைய கட்டுமானத்தில் எங்கெங்கு பிரச்னை உள்ளது, எவ்விடங்களில் புதுப்பித்து கட்ட வேண்டும் என்ற கணக்கெடுப்பு செய்ய கேட்டுள்ளோம்.
பழைய கட்டுமானத்தில் தண்ணீர் வரும்போதுதான், சர்வே முழுமையாக செய்ய முடியும். எங்கு பிரச்னை உள்ளது என தெரியும். தண்ணீர் செல்லும்போது பிரச்னை ஏற்படும் இடங்களை கண்டறிந்து, நீர் நிறுத்தப்பட்ட பின், சீரமைப்பு பணிகளை செய்வது எளிதாகும்.
கடந்த, 31ல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, 70 மைலுக்கு மேல் தண்ணீர் சென்றுள்ளது. இதற்கிடையில் ஒரு இடத்தில் கசிவு ஏற்பட்டு, நீர் வளத்துறை அதிகாரிகள், பெரும் முயற்சி மேற்கொண்டு, 24 மணி நேரத்தில் தடுக்கப்பட்டுவிட்டது. கசிவு ஏற்பட்ட இடத்தில் நிரந்தரமாக தீர்வு காணும்படி பணி செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கும் தற்போது தண்ணீர் எடுத்து கொண்டுள்ளனர். அதில், 1,045 குளத்தில், 860 குளத்துக்கு மேல் தண்ணீர் சென்றுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, ஆண்டுக்கு, 70 நாட்கள் மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டு, மற்ற நாட்களில் அக்குழாயில் தண்ணீர் செல்லாததால், இதுபோன்ற பிரச்னை எழுகிறது. அதை ஒழுங்கு செய்ய, 'எல் அன்ட் டி' நிர்வாகம் முயல்கிறது.
இவ்வாறு கூறினார்.