/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வீடு கட்டும் திட்டத்தில் கூடுதல் பயனாளிகள்' தாராபுரம் பகுதியில் த.மா.கா., வேட்பாளர் உறுதி
/
'வீடு கட்டும் திட்டத்தில் கூடுதல் பயனாளிகள்' தாராபுரம் பகுதியில் த.மா.கா., வேட்பாளர் உறுதி
'வீடு கட்டும் திட்டத்தில் கூடுதல் பயனாளிகள்' தாராபுரம் பகுதியில் த.மா.கா., வேட்பாளர் உறுதி
'வீடு கட்டும் திட்டத்தில் கூடுதல் பயனாளிகள்' தாராபுரம் பகுதியில் த.மா.கா., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 17, 2024 01:44 AM
ஈரோடு:ஈரோடு
லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் பி.விஜயகுமார் நேற்று,
தாராபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஓட்டு சேகரிப்பில்
ஈடுபட்டார்.
பொது செயலாளர் விடியல் சேகர் உட்பட கூட்டணி கட்சி
நிர்வாகிகளுடன் கிராமங்களுக்கு சென்று ஓட்டு சேகரித்து,
விஜயகுமார் பேசியதாவது: ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட
காங்கேயம், தாராபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சிறு,
குறு, நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ளன. நுாற்பாலைகள், அரிசி ஆலைகள்
போன்றவை காங்கேயம் பகுதியில் அதிகமாக உள்ளன. தாராபுரம் பகுதி
வறட்சியான பகுதி என்பதால், இப்பகுதிக்கு ஏற்ற தொழிற்சாலைகளை
நிறுவவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க, தொழில் முனைவோரை
ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வேன்.
தாராபுரம், மூலனுார் பகுதியில்
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி போன்றவை அதிகம்
சாகுபடியாகிறது. அவற்றில் அதிக விளைச்சல், குறைந்த காலத்தில்
உற்பத்தி, இவற்றை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் போன்றவை
ஏற்படுத்தி தரப்படும். தாராபுரம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா,
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்றவைகள் குறைந்த
எண்ணிக்கையிலான பயனாளிகளே பயன் பெற்றுள்ளனர். தகுதியான
அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா, வீடு கட்டும் திட்டத்திலும்
திட்ட பயன் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.
இப்பகுதியில் உள்ள
நீண்ட கால பிரச்னைகள், மத்திய அரசு மூலம் தீர்வு காணக்கூடிய
பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண முயல்வேன். அனைத்து
சட்டசபை தொகுதியிலும் எம்.பி., அலுவலகம் அமைத்து, பொதுமக்களிடம்
இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, அவற்றுக்கு விரைவான தீர்வு காண
நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பேசினார்.
இதை தொடர்ந்து ஈரோடு சட்டசபை தொகுதியில் ஓட்டு சேகரித்தார்.

